Wednesday, December 1, 2010

நிகழ்ச்சி வரிசை - Program Parade - Wonderful Y.T.Lingam Show

தமிழில் நீண்டகாலம் ஒளிபரப்பான நிகழ்ச்சி (show)  Wonderful Y.T.Lingam Show என்று சொல்லலாம். 
 யூகிசேதுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி 1999 முதல் 2002 வரை மூன்று ஆண்டுகள, எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின என்று விபரம் தெரியவில்லை. 
Y.T.Lingam Show  TVI  (கனடா) TTN (ஐரோப்பா) தொலைக்காட்சிகளில் (2003 - 2008 ) ஏறக்குறைய 5 ஆண்டுகள் - 85 கலைஞர்கள் - 125 நிகழ்ச்சிகள் - சாதனைதானே?




செப்டெம்பர் 7, 2003

எனது முதலாவது Wonderful Y.T.Lingam Show நிகழ்ச்சி TVI யினரால்
அவர்களது மூன்றாவது ஆண்டு நிறைவை குறிக்குமுகமாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் அங்கமாக இன்று பிற்பகல் 4.30க்கு ஒளிபரப்பானது.. இந்த் முதலாவது நிகழ்ச்சியில் இசைக்கலைஞ்ர்கள்  யாரும் பங்குப்ற்றவில்லை.

அதிதி : எஸ்.ரி.செந்தில்நாதன் (விஞ்ஞானி)


நவம்பர் 1, 2003


இன்று எனது இரண்டாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  நேயர்களின் வரவேற்பு காரணமாக நிகழ்ச்சியை இரவு 8 மணிக்கு மாற்றி விட்டார்கள். கனடாவிற்கு புதியவர் இடம் தெரியாமல் டாக்சியில் பயணம் செய்வதாக் சுவையான
வெளிப்புறக்காட்சியும் படப்பிடிப்பு செய்து இணைத்தோம். வீட்டு விலாசம் த்ரியாமல் மச்சாள் பச்சைபாவடையுடன் வீட்டுவாசலில் நிறபதுதான் அடையாளம் என்று சொல்லும் அந்த அப்பாவி மனிதராக நேசன் தோன்றினார்.

இன்றைய அதிதி - வி.சத்தியவரதன் ( டாக்சி டிரைவர்)


நவம்பர் 7' 2003

எனது மூன்றாவது நிகழ்ச்சியில் வரகுணன் மகாதேவன் அரசியல் வாதியாக பங்கு பற்றினார். அவருக்கு இந்திய பேச்சுவழக்கு நன்றாக தெரிந்திருந்தது. அசல் தமிழ் நாட்டு அரசியல்வாதியாக தோன்றினார்.

அதிதி - வரகுணன் மகாதேவன் (தமிழ் நாட்டு அரசியல்வாதி)



நவம்பர் 14, 2003

இன்று மாலை 8 மணிக்கு ஒளிபரப்பான நான்காவது நிகழ்ச்சியில் துஷி ஞானப்பிரகாசம் ஒரு மேடை நாடக நடிகனாக தோன்றினார். ஒரு சாப்பாட்டு கடையிலே அவர் ராஜவேசத்துடன் நிற்பதாக ஒரு வெளிப்புற காட்சியும் இணத்துக் கொண்டோம். இம்முறை முதன்முதலாக இசைக்கலைஞர்கள் - குட்டிக்கலைஞர்கள் இணைந்துகொண்டார்கள். பாரதி கலைக்கோவில் மதிவாசனின் பிள்ளைகள்.

அதிதி - துஷி ஞானப்பிரகாசம் ( நாடக நடிகன்)



நவம்பர் 28, 2003

இன்று எனது ஐந்தாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கமல்பாரதி ஒரு விளையாட்டுவீரனாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒரு திருப்பமாக இசைக்கலைஞர்கள் இம்முறை பஙுகுபற்றினார்கள். சுருதி இசைக்குழுவச் சேர்ந்த ராகவன் (டிரம்ஸ்)  ரமேஷ்  ( கொங்கோஸ்)                      ,  ஆகியோருடன் எனது அழைப்பில் சிவனேசன் (கீபோட்)  இணைந்துகொண்டார்.. நிகழ்ச்சி களை கட்டத் தொடங்கியது. இசைக்கலைஞர்கள் இறுதி நிகழ்ச்சி வரை கலந்துகொண்டார்கள்.


இன்றைய அதிதி - கமல்பாரதி (விளையாட்டு வீரன்)


டிசம்பர் 12, 2003

இன்று எனது ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சினிமா நடிகையாக யசோதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  தனக்கு 'டப்பிங்' செய்பவர்களுக்கு வசதியாக தான் ஆனா,ஆவன்னா என்று அகரவரிசையில் சொல்ல, அவர்கள் வசனங்களை உதட்டின் அசைவிற்கேற்ப அப்படிச் சொல்வர்கள் என்று செய்து காட்டியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இன்றைய அதிதி - யசோதா (சினிமா நடிகை)


டிசம்பர் 26. 2003

இன்றைய எனது ஏழாவது நிகழ்ச்சியில் கனடாவில் நிகழ்ச்சி ஒழுங்கு செய்பவராக இருக்கும் ஊரில் ஆறாம் திருவிழா ஆறுமுகம் என்று பிரசித்தி பெற்றவராக கணபதி ரவீந்திரன் தோன்றினார்.


இன்றைய அதிதி - கணபதி ரவீந்திரன்     (நிகழ்ச்சி அமைப்பாளர்)


ஜனவரி 9, 2004

Y.T.Lingam show வின் எட்டாவது நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. ஒரு வில்லன் நடிகராக நேதன் தோன்றினார்.

இன்றைய அதிதி - நேதன் (வில்லன் நடிகர்)





ஜனவ்ரி 23, 2004


இன்று மாலை எட்டு மணிக்கு எனது ஒன்பதாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சுரேஷ்ராஜா வீடியோ படப்பிடிப்பாளராக தோன்றினர்.






இன்றைய அதிதி: சுரேஷ்ராஜ (வீடியோ படப்பிடிப்பாளர்)


பெப்ரவரி 13, 2004

இன்று மாலை எட்டு மணிக்கு எனது பத்தாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கடலைக்காரக்கண்மணி அக்காவாக ரூபி யோகதாசன் தோன்றினார். எனது நிகழ்ச்சிகளில் அதிக வரவேற்பை கனடாவிலும்,  ஐரோப்பாவிலும் பெறற நிகழ்ச்சி இது. கோவில் திருவிழாவில் கே.கே.அக்கா கடலை வியாபாரம் செய்வதாக சேர்த்துக் கொண்டது, அவரது கனேடிய வருகை பற்றிய  தகவல்கள்., பிள்ளைகள்  படித்து எஞ்சினியராக, டொக்டராக, சட்டத்தரணியாக இருப்பது பற்றிச் சொல்ல, யாழ்ப்பாணத்து தாய்மார்கள் எப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைப்பார்கள் என்று நான் விளக்க பலரின் நெஞ்சைத்தொட்டது. மறக்கமுடியாத நிகழ்ச்சி.

இன்றைய அதிதி - ரூபி யோகதாசன் (கடலை கண்மணி அக்கா)



பெப்ரவரி 27, 2004

இன்று மாலை எட்டு மணிக்கு எனது பதினோராவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஊரில் டொக்டராக இருந்து, கனடாவில் Security Guard  வேலை பார்ப்பவராக
கரு கந்தையா இணைந்து கொண்டார். அவர் டொக்டராக வேலை பார்ப்பது போலவும், Security Guard வேலை பார்ப்பது போலவும் வெளிப்புறக் காட்சிகள் சேர்த்துக் கொண்டோம்.

இன்றைய அதிதி :  கரு கந்தையா ( காவல் உத்தியோகத்தர்)


மார்ச் 12, 2004

இன்று மாலை 8 மணிக்கு, எனது 12வது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  மூத்த கலைஞர் கே.கனகலிஙகம் விதானையாராக இருந்து, இங்கு விளம்பரங்கள் வீடு வீடாக போடுவதாக தோன்றினார். வெளிப்புறக்காட்சியும் எடுத்தோம்.

இன்றைய அதிதி : கே.கனகலிங்கம் ( விதானை/ விளம்பர விநியோகம்)



மார்ச் 26, 2004

இன்று மாலை எனது 13வது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  சுதா வாமதேவன் கலந்து கொண்டார்.  சைக்கிள் கடை வைத்திருந்தவர். இங்கு வாகனச்சாரதி பயிற்சி வழ்ங்குபவராகத் தோன்றினார்.

இன்றைய அதிதி : சுதா வாமதேவன் (சைக்கிள் கடை/- சாரதிப் பயிற்சியாளர்)


ஏப்ரல் 9, 2004

இன்று எனது நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி மாலை 8 மணிக்கு ப்ளிபரப்பானது. குவின்ரஸ் துரைசிங்கம்  இலங்கையில் பஸ் நடத்துனராக இருந்து, இங்கே பிரயாண முகவராக இருப்பவராக கலந்து கொண்டார்.

இன்றைய அதிதி : குவின்டஸ் துரைசிங்கம் (நடத்துனர்- /பிரயாணமுகவ்ர்)


ஏப்ரல் 23, 2004

இன்று எனது 15வது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஜயந்தன் போஸ்டர் எழுதுபவராகவும்,  பெட்டிசன் எழுதுபவராகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெளிப்புறக்காட்சியில் இன்னமொரு கலைஞரும் கலந்து கொண்டார்.

இன்றைய அதிதி: ஜயந்தன் ( போஸ்டர்- பெட்டிசன் எழுதுபவர்)


மே 7, 2004

இன்று மலை 8 மணிக்கு எனது 16வது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.  ராஜ்மோகன்  புடவைக்கடையில் வேலை செய்பவராகவும், பிஸ்ஸா விநியோகம் செய்பவராகவும் தோன்றினார். அவர் பிஸ்ஸா டெலிவரி செய்பதுபோல வெளிப்புறக்காட்சியில் பிரசாந்த் கலந்துகொண்டான்.



இன்றைய அதிதி: ராஜ்மோகன் (புடவைகடை - பிஸ்ஸா டெலிவரி)



மே 21, 2004


இன்று எனது பதினேழாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. துரை ர்வீந்திரன் இணந்து கொண்டார்.  இலங்கையில் கூட்டுறவு சங்க முகாமையாளர், த்ற்போது சங்கமொன்றின் பொருளாளராக இருப்பவராக தோன்றினார்.

இன்றைய அதிதி : துரை ரவீந்திரன் (கூட்டுறவு முகாமையாளர்/ பொருளாளர்)